வடமாகாண பிரதி தொழில் ஆணையாளர் நிவேதிகா கேதீசனுக்கு பிரிவுபசார நிகழ்வு!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

தொழில் திணைக்களத்தின் வடமாகாண பிரதி தொழில் ஆணையாளராக பதவி வகித்து வந்த திருமதி. நிவேதிகா கேதீசன் அவர்களின் பிரிவுபசார மற்றும் சேவை நலன் பாராட்டு விழா இன்று(நவம்பர் 9) யாழ் தொழில் திணைக்கள அலுவலக மண்டபத்தில் சிறப்பாக இடம் பெற்றது.

02.07.2018 தொடக்கம் இன்று (நவம்பர் 9) வரை வடமாகாண பிரதி தொழிலாளர் பதவி வகித்து நாளை முதல் பதவி மாற்றம் பெற்று நெடுந்தீவு உதவி பிரதேச செயலாளராகவும் பதில் பிரதேச செயலாளராகவும் நியமிக்கப்பட உள்ள நிலையில் இன்று வடமாகாணத்தில் உள்ள தொழில் திணைக்கள அலுவலர்களினால் இந்த நிகழ்வு ஏற்பாடாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்வில் யாழ் மாவட்ட உதவ தொழில் ஆணையாளர் , தொழிற்சாலை பரிசோதனை பொறியியலாளர் , வட மாகாண தொழில் அலுவலகங்களை சேர்ந்த தொழில் அலுவலர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டு மாலை அணிவித்து பொன்னாடை போர்த்தி வாழ்த்துரைகள் வழங்கியதுடன் நினைவு பரிசுகளும் வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

Share this Article