அரச பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் 13 பேர் வைத்தியசாலையில்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

களுத்துறை, நாகொட பகுதியில் இன்று (நவம்பர் 8) காலை இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று விபத்திற்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த 13 பேர் நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மாபலகம பகுதியில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த அரச பேருந்து ஒன்றே இவ்வாறு விபத்திற்குள்ளாகியுள்ளது.

ஒரே திசையில் பயணித்த முச்சக்கரவண்டி ஒன்று திடீரென வலது பக்கம் நோக்கி திரும்ப முற்பட்டதில் பேருந்து வீதியை விட்டு விலகி சுவரில் மோதுண்டு விபத்திற்குள்ளாகியுள்ளது.

Share this Article