யாழ் மத்திய பேருந்து நிலையத்தில் பிறந்த நாள் கொண்டாடிய மேலும் ஐவர் கைது!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

யாழ்ப்பாண மத்திய பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பில் மேலும் ஐந்து பேர் இன்று(ஒக்ரோபர் 18) கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாண மாவட்ட பிராந்திய குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸாரால் குறித்த ஐவரும் கைதாகினர்.

கடந்த சனிக்கிழமை, யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திற்கு உந்துருளிகளில் பிரவேசித்த 150க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஒன்றுகூடி பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

குறித்த இளைஞர்களின் செயற்பாடானது பொது மக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் அமைந்துள்ளதாக தெரிவித்து, யாழ்ப்பாண பொலிஸாருக்கு முறைப்பாடு அளிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து, யாழ்ப்பாண மாவட்ட பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் அன்றைய தினமே இரண்டு பேர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this Article