உடுப்பிட்டி மகளிர் கல்லூரி மாணவி தேசிய மட்ட போட்டிக்கு தெரிவு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

அகில இலங்கை வடக்கு மாகாண நடனப் போட்டியில் சிரேஷ்ட பிரிவில் ஜெ.மாதினீ எனும் மாணவி முதலாமிடத்தைப் பெற்று தேசிய மட்ட போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.

அகில இலங்கை வடமாகாண நடனப் போட்டிகள் பளை மத்திய கல்லூரியில் நடைபெற்றது.

இதில் உடுப்பிட்டி மகளிர் கல்லூரியைப் பிரதிநிதித்துவம் செய்த ஜெ.மாதினீ சிரேஷ்ட பிரிவில் பாரதிதாசன் பாடலில் முதலாமிடத்தைப் பெற்று தேசிய மட்டப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளார்.

அத்துடன் உடுப்பிட்டி மகளிர் கல்லூரியை பிரதிநிதித்துவம் செய்த ந.சகானா இரண்டாமிடத்தை பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Share this Article