உடைமையில் கசிப்பு வைத்திருந்த 17 வயது சிறுவன் கைது!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

ஆயிரத்து 500 மில்லிலீற்றர் கசிப்பை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் 17 வயதுச் சிறுவன் ஒருவர் கோப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் ஊரெழு, பொக்கணையில் வீடொன்றைச் சோதனையிட்டபோதே பொலிஸார் கசிப்பைக் கைப்பற்றியுள்ளனர். 17 வயதுச் சிறுவனும் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட சிறுவனை நீதிமன்றில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, 5 லீற்றர் கசிப்பை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் கடந்த 14 ஆம் திகதி பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

கோப்பாய் பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் வீடொன்றில் சோதனையிட்ட பொலிஸார் கசிப்பைக் கைப்பற்றியதுடன், 44 வயதான பெண்ணையும் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவரை நீதிமன்றில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

Share this Article