வடக்கு மாகாண விவசாயிகள் தரச் சான்றிதழ் பெறுவதை இலகுபடுத்துதல் அவசியம்!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

வடக்கு மாகாண விவசாயிகள் ஏற்றுமதித் தரச் சான்றிதழ் பெறுவதை இலகுபடுத்த வேண்டும் என்று வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் விவசாய அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றிலேயே வடக்கு ஆளுநர் இந்தக் கோரிக்கையை முன்வைத்தார்.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் விவசாயிகள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். அவற்றில் முக்கியமானது ஏற்றுமதித் தரச் சான்றிதழ் பெறுவதில் உள்ள இடர்பாடுகள். தரச் சான்றிதழைப் பெறுவதற்கு கொழும்புக்குச் செல்ல வேண்டிய நிலைமை உள்ளது.

இந்த நடைமுறையை இலகுபடுத்தி விவசாயிகள் தரச் சான்றிதழை விரைவாகப் பெறுவதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்று ஆளுநர் கோரிக்கை விடுத்தார்.

யாழ்ப்பாணத்தில் உற்பத்தி செய்யப்படும் பொருள்கள் வெளியிடங்களில் விற்பனை செய்யப்படுகின்றது. அந்தப் பொருள்களுக்கான விலை நிர்ணயம் தொடர்பாகவும் கவனம் செலுத்த வேண்டும் என்றும் வடக்கு ஆளுநர் கோரியுள்ளார்.

Share this Article