’சனல் 4’ விடயத்தை ஆராய நாடாளுமன்றில் விசேட குழு!- 17ஆம் திகதி பிரேரணை சமர்ப்பிப்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பான ‘சனல் 4’ குற்றச்சாட்டுகளை விசாரணை செய்வதற்கான நாடாளுமன்ற விசேடகுழுவை நியமிப்பதற்கான பிரேரணை எதிர்வரும் 17 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளது.

நாடாளுமன்றம் 17 திகதி முதல் 20 ஆம் திகதி வரை கூடவுள்ளது. நாடாளுமன்றம் கூடும் ஒவ்வொரு தினத்திலும் மு.ப. 9.30 மணி முதல் மு.ப. 10.30 மணி வரை வாய்மூல விடைக்கான வினாக்களுக்குக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

2023 ஒக்ரோபர் 17 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மு.ப. 10.30 மணிக்கு, உயிர்த்த ஞாயிறு தினம் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைக் குண்டுத்தாக்குதல் தொடர்பில் பிரித்தானிய “சனல் 4” அலைவரிசையால் ஒளிபரப்பப்பட்ட நிகழ்ச்சியின் மூலம் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை விசாரணை செய்வதற்கான நாடாளுமன்ற விசேட குழுவை நியமிப்பதற்கான பிரேரணை முன்வைக்கப்படவுள்ளது என்று பதில் செயலாளர் நாயகம் தெரிவித்தார்.

Share this Article