குப்பைக்குத் தீ வைத்தபோது தீப்பற்றி பெண் உயிரிழப்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

குப்பைக்குத் தீ வைத்தபோது தீப்பற்றிக் காயமடைந்த குடும்பப் பெண் ஒருவர் சிகிச்சை பயனின்றி நேற்று(ஒக்ரோபர் 13) உயிரிழந்தார்.

சாவகச்சேரி, சங்கத்தானையைச் சேர்ந்த சுகந்தன் தயாபரி (வயது=37) என்பவரே உயிரிழந்தவராவார்.

இவர் தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில் கடந்த 7ஆம் திகதி சாவகச்சேரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டிருந்தார்.

இறப்பு விசாரணைகளை யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி ந.பிறேமகுமார் மேற்கொண்டார்.

Share this Article