யாழ் மாவட்ட பண்பாட்டுப் பேரவையின் ஏற்பாட்டில் மாவட்டப் பண்பாட்டு விழா!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

யாழ்ப்பாண மாவட்ட பண்பாட்டுப் பேரவையால் எதிர்வரும் நவம்பர் மாதம் இரண்டாம் வாரத்தில் மாவட்டப் பண்பாட்டு விழாவை நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த விழாவில் மூத்த கலைஞர்களும் விருது வழங்கி கௌரவிக்கப்படவுள்ளனர். இவ்விருதுகளுக்கான விண்ணப்பப்படிவம் மற்றும் அறிவுறுத்தல்களை மாவட்ட செயலக இணையத்தளத்திலும் (http://jaffna.dist.gov.lk), பிரதேச செயலக கலாசாரப் பிரிவிலும் பெற்றுக்கொள்ள முடியும்.

“யாழ்முத்து”, “இளங்கலைஞர்” விருதுகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரிகள், பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்பப்படிவம் மற்றும் உரிய ஆவணங்களை எதிர்வரும் 20 ஆம் திகதிக்கு முன்னதாக தங்கள் பிரதேச செயலகத்தில் ஒப்படைக்குமாறு யாழ் மாவட்ட பண்பாட்டு பேரவை அறிவித்துள்ளது.

Share this Article