2023 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பம்!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

சர்வதேச கிரிக்கட் பேரவையின் ஆடவருக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் இன்று(ஒக்ரோபர் 5) ஆரம்பமாகவுள்ளது. இந்தியாவில் இடம்பெறவுள்ள குறித்த தொடரில் இந்தியா, இலங்கை , அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, நியுஸிலாந்து, தென்னாபிரிக்கா, பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து ஆகிய 10 அணிகள் பங்கேற்கின்றன.

இந்த உலகக்கிண்ண தொடரில் மொத்தமாக 48 போட்டிகள் நடைபெறவுள்ளன. இந்தியாவிலுள்ள ஹைத்ராபாத், அஹமதாபாத், தர்மசாலா, டெல்லி, சென்னை, லக்னோ, புனே, பெங்களூர், மும்பை மற்றும் கல்கத்தா ஆகிய 10 மைதானங்களில் இந்தப் போட்டிகள் இடம்பெறவுள்ளன.

இந்த நிலையில் இன்று இடம்பெறவுள்ள முதலாவது போட்டியில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதவுள்ளன.குறித்த போட்டி இன்று பிற்பகல் 2 மணிக்கு அஹமதாபாத்தில் ஆரம்பமாகவுள்ளது.

Share this Article