“ஐரோப்பா டீசல் இருப்பை உடனடியாக சந்தைக்கு விடுவிக்க இணக்கம்” – ட்ரம்ப் அறிவிப்பு!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read
EVIAN-LES-BAINS, FRANCE - JUNE 17: U.S. President Donald Trump attends a press conference during the G7 Leaders' Summit on June 17, 2026 in Evian-les-Bains, France. Leaders from the Group of 7 (G7) countries convened in Evian, France, near the Swiss border, for their annual summit to discuss challenges to peace and security for Ukraine and Europe, the situation in the Middle East, and other geopolitical issues. (Photo by Anna Moneymaker/Getty Images)

ஈரான் மீதான போர் காரணமாக உலகளவில் எரிபொருள் விலைகள் சாதனை அளவை எட்டியுள்ள பின்னணியில், ஐரோப்பிய நாடுகள் தங்களிடம் பெருமளவில் சேமித்து வைக்கப்பட்டுள்ள டீசல் இருப்பை உடனடியாகச் சந்தைக்கு விடுவிக்க ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

தமது ‘ட்ரூத் சோஷியல்’ சமூக வலைத்தளப் பதிவில் இதனை உறுதிப்படுத்தியுள்ள ட்ரம்ப், “ஐரோப்பா தனது அதிகளவிலான டீசல் இருப்பை விடுவிக்க தற்போது சம்மதித்துள்ளது.

இதற்கான நடவடிக்கைகள் உடனடியாகத் தொடங்கும். இந்த விவகாரத்தில் கவனம் செலுத்தியதற்கு நன்றி” என்று பதிவிட்டுள்ளார்.

டீசல் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த ஐரோப்பிய நாடுகள் தங்களது அவசரகால இருப்பைப் பயன்படுத்தாவிட்டால், அமெரிக்காவில் இருந்து டீசல் ஏற்றுமதிக்குத் தடை விதிக்கப்படும் என ட்ரம்ப் முன்னர் எச்சரித்திருந்தார்.

இந்த நிலையிலேயே, ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுடன் மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தைகளை அடுத்து இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share this Article
Leave a comment