தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் வெளியான அறிவிப்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் 15 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், குறித்த பரீட்சை தொடர்பான விரிவுரைகள், கருத்தரங்குகள், பயிற்சி வகுப்புகள் மற்றும் செயலமர்வுகள் எதிர்வரும் 11 ஆம் திகதி நள்ளிரவு முதல் தடை செய்யப்பட்டுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் 15 ஆம் திகதி தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை சுமார் 2,888 நிலையங்களில் நடைபெறவுள்ளது.

புலமைப்பரிசில் பரீட்சையின் இரண்டாம் பாகம் காலை 9.30 மணி முதல் 10.45 மணி வரையும், முதல் பாகம் 11.15 மணி முதல் மதியம் 12.15 மணி வரையும் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Article