சிறுவர் தினத்தினத்தை முன்னிட்டு சிறுவர்களுக்கு கசூரினா கடற்கரையில் இலவச அனுமதி!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

உலக சிறுவர் தினத்தினத்தை முன்னிட்டு விசேட ஏற்பாடாக சிறுவர்கள் கசூரினா கடற்கரைக்கு பிரவேசிப்பதற்கான இலவச நுழைவு அனுமதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

உலக சிறுவர் தினம் வருடந்தோறும் ஒக்டோபர் 01 திகதி அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில் இம்முறை உலக சிறுவர் தின கருப்பொருளாக “எல்லாவற்றையும் விட பிள்ளைகள் பெறுமதியானவர்கள்” என்னும் தொனிப்பொருளின் கீழ் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.

காரைநகர் பிரதேச சபை சிறுவர்களை கெளரவிக்கும் முகமாகவும் அவர்களை மகிழ்ச்சிப்படுத்தி சந்தோசப்படுத்துவதற்காக பத்து வயதிற்கு உட்பட்ட சிறுவர்கள் கசூரினா கடற்கரைக்கு பிரவேசிப்பதற்கான இலவச நுழைவு அனுமதியினை ஒக்டோபர்01 முதல் ஒக்டோபர் 06 திகதி வரை அறிமுகப்படுத்தியுள்ளது.

Share this Article