‘கோப்பாய் ஆசிரியர் கலாசாலை பற்றிய ஆய்வு’ நூல் வெளியீட்டு விழா!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

கோப்பாய் ஆசிரியர் கலாசாலை பற்றிய ஆய்வு என்ற நூல் கலாசாலையின் முன்னாள் பிரதி அதிபர் பண்டிதர் கலாநிதி செ. திருநாவுக்கரசு அவர்களால் எழுதி வெளியிடப்பட்டது.

நேற்று (ஒக்ரோபர் 1) இடம்பெற்ற கல்லூரி நாள் நிகழ்வுகளில் பண்டிதர் செ. திருநாவுக்கரசு நூலின் முதல் பிரதியை நிகழ்வின் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் இ. இளங்கோவனிடம் வழங்கி சிறப்பித்தார்.

இந்நூல் பற்றிய வெளியீட்டு உரையினை இலங்கை தமிழர் ஆசிரியர் சங்க முன்னாள் பொதுச் செயலாளரும் தற்போதைய கௌரவ ஆலோசகரும் கலாசாலையின் ஓய்வு நிலை விரிவுரையாளருமாகிய சரா புவனேஸ்வரன் அவர்கள் ஆற்றினார்.

Share this Article