கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை தொடர்பில் வெளியான அறிவிப்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை ஒன்றரை மாதம் வரை பிற்போடப்படும் சாத்தியம் காணப்படுகின்றது என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவிக்கின்றார்.

ஹோமாகம – பிடபத்த பகுதியில் நேற்று(செப்ரெம்பர் 23) நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர், ஊடகவியலாளிடம் கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் நவம்பர்  மாதம் ஆரம்பத்தில் நடைபெறவிருந்த உயர்தரப் பரீட்சை, கடந்த சில தினங்களுக்கு முன்னர் பிற்போடப்பட்டிருந்தது.

இதன்படி, உயர் தர பரீட்சைக்கான புதிய திகதி பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்தினால் விரைவில் அறிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Share this Article