வெற்றுக் காணிக்கும் வரவிருக்கின்றது வரி!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

வெற்றுக் காணிகளாக உள்ள விவசாயக் காணிகளுக்கு விசேட வரி ஒன்று விதிக்கப்படவுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கான முன்மொழிவு அடுத்த வரவு =செலவுத் திட்டத்தில் முன்வைக்கப்படும் என்று சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அனுபா பாஸ்கோல் தெரிவித்தார்.

பெருந்தோட்ட நிறுவனங்கள் மற்றும் தனியாரிடம் பெருமளவான விவசாயக் காணிகள் விவசாய நடவடிக்கைகளுக்கு உட்படுத்தாது இருக்கின்றன.

அவற்றுக்கு விசேட வரி விதிக்கப்பட்டு, அதன்மூலம் கிடைக்கும் நிதியை விவசாய நடவடிக்கைகளை ஊக்குவிக்கப் பயன்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

Share this Article