லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலையும் அதிகரிப்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

லாஃப்ஸ் எரிவாயு நிறுவனமும் சமையல் எரிவாயு விலையை அதிகரிக்க தீர்மானித்துள்ளது.

லாஃப்ஸ் எரிவாயு நிறுவனம் நேற்று (செப்ரெம்பர் 4) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, 12.5 கிலோ கிராம் எடைக்கொண்ட சமையல் எரிவாயுவின் விலையை 145 ரூபாவினால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இன்று நள்ளிரவு முதல் 12.5 கிலோ கிராம் எடைக்கொண்ட சமையல் எரிவாயுவின் விலை 3,835 ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளது.

அத்துடன், 5 கிலோ கிராம் எடைக்கொண்ட சமையல் எரிவாயுவின் விலையை 59 ரூபாவினால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இன்று நள்ளிரவு முதல் 5 கிலோ கிராம் எடைக்கொண்ட சமையல் எரிவாயுவின் விலை 1,535 ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளது.

Share this Article