பாடசாலை தவணைகள் குறித்து கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள தகவல்!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

2024 ஆம் கல்வியாண்டுக்கான பாடசாலைகளுக்குரிய புதிய தவணை பெப்ரவரி மாதம் 21 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இந்த வருடத்திற்கான அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணைக்குரிய முதலாம் கட்டம் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 17 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என்பதோடு, இரண்டாம் கட்டம் ஓகஸ்ட் மாதம் 28 ஆம் திகதி முதல் ஒக்டோபர் 27 ஆம் திகதி வரை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

மூன்றாம் தவணையின் முதலாம் கட்டம் ஒக்டோபர் 30 ஆம் திகதியிலிருந்து நவம்பர் 24 ஆம் திகதி வரையிலும் இரண்டாம் கட்டம் ஜனவரி மாதம் முதலாம் திகதியிலிருந்து பெப்ரவரி 16 ஆம் திகதி வரையிலும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Share this Article