போத்தல் மூடி தொண்டையில் சிக்கி குழந்தை உயிரிழப்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

அக்குரஸ்ஸ – தலாகம பகுதியில் போத்தல் மூடி தொண்டையில் இறுகியமையால் குழந்தையொன்று உயிரிழந்துள்ளது.

நேற்றுமுன்தினம் இரவு(ஜூலை 15) குறித்த குழந்தை தனது வீட்டில் இந்த அனர்த்தத்திற்கு முகங்கொடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஒரு வயதும் 15 நாட்களும் நிறைந்த குழந்தையொன்றே இவ்வாறு உயிரிழந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் அக்குரெஸ்ஸ பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Share this Article