200 பாடசாலைகள் வடக்கில் மூடப்பட்டது!- இன்னும் பல பாடசாலைகள் மூடப்படும் அபாயம்!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

வடக்கு மாகாணத்தில் 200 பாடசாலைகள் மூடப்பட்டுள்ள நிலையில் உள்ளன என்றும், போருக்குப் பின்னர் 64 பாடசாலைகள் இன்னமும் மீள ஆரம்பிக்கப்படவில்லை என்றும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.

100க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பல பாடசாலைகள் மூடப்படும் அபாய நிலைமையை எதிர்கொண்டுள்ளன.

இலங்கை முழுவதும் தற்போது 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை நிலவுகிறது. கிழக்கு மாகாணத்திலும், வடமாகாணத்திலும் தலா 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர் பற்றாக்குறை காணப்படுகிறது.

கிழக்கு மாகாணத்தில் கஷ்டப் பிரதேசங்களில் ஆசிரியர் பற்றாக்குறை அதிகரித்துக் காணப்படுகிறது. மூதூர் கல்வி வலயத்தில் ஆயிரத்து 300க்கும் அதிகமான ஆசிரியர்களுக்குப் பற்றாக்குறை காணப்படுகிறது.

ஆசிரியர் பற்றாக்குறையை உடனடியாகத் தீர்ப்பதற்கு அரசாங்கம் எந்தவொரு நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவில்லை.

இலவசக் கல்வியைச் சீரழித்து மாணவர்களுக்குத் தொடர்ந்தும் அரசாங்கம் அநீதி இழைத்து வருகிறது-என்றார்.

Share this Article