புதிய பொலிஸ்மா அதிபர் 48 மணிநேரத்துக்குள் நியமனம்!- பிரதமர் தெரிவிப்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, எதிர்வரும் 48 மணிநேரத்துக்குள் பொலிஸ்மா அதிபராக புதிய ஒருவரைப் பெயரிடுவார் என்று பிரதமர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று(ஜூலை 7) உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

எப்போது புதிய பொலிஸ்மா அதிபர் நியமிக்கப்படுவார் என்று சபையில் உரையாற்றும்போது எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும ஆகியோர் கேள்விகளை எழுப்பியிருந்தனர்.

இதற்குப் பதிலளிக்கும்போதே பிரதமர் மேற்கண்டவாறு கூறினார். அரசியல் சாசன சபையை எந்த நேரத்திலும் சபாநாயகரால் கூட்ட முடியும் எனவும், ஜனாதிபதியின் பரிந்துரைக்கு அனுமதி பெற்றுக்கொள்ள முடியும் எனவும் பிரதமர் மேலும் தெரிவித்தார்.

Share this Article