இஸ்ரேலில் தொழில் பெற்றுத்தருவதாகக் கூறி நிதி மோசடியில் ஈடுபட்டவர் கைது!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

இஸ்ரேலில் வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாகக் கூறி நிதி மோசடியில் ஈடுபட்ட ஒருவர், சிலாபம் வய்க்கால் பகுதியில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இஸ்ரேலில் வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாகக் கூறி, ஒருவரிடம் இருந்து 4 இலட்சம் ரூபாவை குறித்த நபர் பெற்றுக்கொண்டுள்ளதாக இலங்கை வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தினால் அங்கீகரிக்கப்பட்ட தொழில் அனுமதிப்பத்திரம் இன்றி குறித்த நபர் இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மாளிகாகந்தை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட குறித்த சந்தேகநபர், 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

Share this Article