உலகளாவிய ரீதியில் மீள நெருக்கடி எழும்!- நிதி ராஜாங்க அமைச்சர் எச்சரிக்கை!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

உலகளாவிய ரீதியில் மீண்டும் பொருளாதார நெருக்கடி ஏற்படக்கூடும் என நிதி ராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

தந்திரிமலை பகுதியில் நேற்றுமுன்தினம் நடந்த நிகழ்வொன்றில் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வலுவடைந்துள்ளது. அரச செலவினங்கள் அத்தியாவசிய தேவைக்கு மாத்திரம் பயன்படுத்தப்படுகின்றது.

நாட்டில் தற்போது பொருளாதாரம் மீண்டெழுந்து வருகின்றது. எதிர்காலத்தி் உலகில் மீண்டும் பொருளாதார நெருக்கடி ஏற்பட வாய்ப்புள்ளது என்று தரவுகள் தெரிவிக்கின்றன.

2024 ஆம் ஆண்டுக்கு செல்லும் போது, தற்போதைய நிலையை விடவும் அதிகளவில் வெற்றியை நோக்கி பயணிக்க முடியும்-என்றார்.

Share this Article