கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட சிறுதொழில் முயற்சியாளருக்கு உதவி!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

கொரோனா தொற்று மற்றும் பொருளாதார நெருக்கடி நிலை காரணமாக சிறுதொழில் முயற்சிகளினால் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு உதவு தொகை வழங்கும் செயற்திட்டத்தை ஹற்றன் நஷனல் வங்கி இந்த ஆண்டும் தொடர்ந்துள்ளது.

வடக்கு மாகாணத்தில் கடந்த ஆண்டு 66 வாடிக்கையாளர்களுக்கு 6.6 மில்லியன் ரூபாயை உதவு தொகை வழங்கி ஊக்குவித்த ஹற்றன் நஷனல் வங்கி, இந்த ஆண்டு மேலும் 100 வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதற்காக 10 மில்லியன் ரூபாயை ஒதுக்கியுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த உதவித் தொகையை வழங்கும் செயற்திட்டம் ஹற்றன் நஷனல் வங்கியின் வடபிராந்திய அலுவலகத்தினால் இன்று(மே 23) ஆரம்பித்துவைக்கப்பட்டது.

Share this Article