கதிர்காம யாத்திரிகர்களுக்கு உணவு வழங்கிய பௌத்த பிக்கு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

புனித கதிர்காம யாத்திரை செல்லும் பக்த அடியார்களின் பயணக் களைப்பினை தீர்க்கும் வகையில் பௌத்த பிக்கு ஒருவரின் தலைமையிலான குழுவினர் அவர்களுக்கு உணவு வழங்கியுள்ளனர்.

கதிர்காம உற்சவத்தில் பங்கேற்கும் நோக்கில் பாதயாத்திரையாகச் செல்லும் யாழ்ப்பாண பிரதேசத்தைச் சேர்ந்த தமிழ் இந்து பக்தர்கள் மே 17 ஆம் திகதி புல்மோடையை சென்றடைந்தனர்.

யாத்திரிகளின் பயணக் களைப்பை நீக்கும் நோக்கில் அரிமலை வன ஆராமயவின் ஸ்தாபகர் வணக்கத்திற்குரிய பணமுரே திலகவன்ஸ தேரர் தலைமையிலான சிங்கள மற்றும் தமிழர்களின் ஒத்துழைப்புடன் உணவு வழங்கப்பட்டுள்ளது.

அரிசி மல விஹாரையை அண்டிய பகுதியில் காலை உணவு மற்றும் தேநீர் வழங்கப்பட்டுள்ளது.

Share this Article