வாகன சில்லுக்குள் சிக்குண்ட தீயணைப்புப் படைவீரர் மருத்துவமனையில்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

யாழ் மாநகர சபையின் தீயணைப்பு வாகன சில்லினுள் சிக்குண்ட தீயணைப்புப் படை வீரரொருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் நேற்றுமுன்தினம் (ஏப்ரல் 18) செவ்வாய்க்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது.

தீயணைப்பு வாகனம் ஹான்ட் பிரேக் போடப்படாமல் தரிப்பிடத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் வாகனம் மெது மெதுவாக நகர்வதைக் கண்ட தீயணைப்பு படை வீரரொருவர் அதனை நிறுத்துவதற்காக கல் ஒன்றை சில்லுக்கு முன்பாக வைக்க முயன்றுள்ளார். இதன்போது சில்லுக்குள் அகப்பட்டு காயமடைந்தார்.

காயமடைந்த தீயணைப்புப் படை வீரர் அங்கிருந்தவர்களால் மீட்கப்பட்டு யாழ்ப்பாணம் போதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Share this Article