பாசத்திற்காக யாத்திரை யாழில் இருந்து ஆரம்பம்!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தலைமையில், ‘பாசத்திற்காக யாத்திரை’ எனும் தொனிப்பொருளில் எதிர்க்கட்சிகள் இணைந்து புதிய வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தமிழ் பிரிவின் ஊடக பேச்சாளர் உமாச்சந்திர பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

இன்று(ஏப்ரல் 18) யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “நாளையதினம் நாட்டின் ஜந்து முக்கியமான இடங்களில் இருந்து குறித்த யாத்திரையை ஆரம்பிக்கவுள்ளது. குறிப்பாக யாழ்ப்பாணம், மன்னார், காத்தான்குடி, கண்டி, மற்றும் கதிர்காமம் ஆகிய இடங்களில் இருந்து யாத்திரை ஆரம்பமாகவுள்ளது.

இலங்கையில் உள்ள அனைத்து மக்களும் இலங்கையர்களாக வாழ்வதற்கான அடிப்படை உரிமையை கோருவதே இந்த யாத்திரையின் முக்கியமான நோக்கம் ஆகும்.

அண்மைக்காலமாக இலங்கையில் மத மற்றும் இனரீதியிலான உரிமைகள் மீற்படுவதாகவும் இங்குள்ள மக்கள் இலங்கையர்களாக வாழ்வது மிகவும் சவாலாக உள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.

Share this Article