பண்ணைச் சுற்றுவட்டத்திலுள்ள நாகபூசனி அம்மன் சிலையை அகற்ற பொலிஸார் தீவிரம்!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

யாழ்ப்பாணம் பண்ணைச் சுற்றுவட்டப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நயினாதீவு நாகபூசனி அம்மனை குறிக்கும் நாகபூசனி அம்மனின் திருவுருவச் சிலையை அகற்றுவதற்கு பொலிஸார் முயற்சித்து வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

நயினாதீவு விகாராதிபதியின் தலையீட்டினாலேயே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள நாகபூசனி அம்மன் திருவுருவச் சிலைக்கு தமிழ் புதுவருடப் பிறப்பில் பால் அபிசேகம் உருத்திர சேனா அமைப்பினால் செய்யப்பட்டது.

இந்த நிலையில் உருத்திர சேனா அமைப்பின் பிரதிநிதிகள் நேற்று யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்துக்கு அழைக்கப்பட்டு 3 மணிநேரம் தீவிர விசாரைணக்கு உள்படுத்தப்பட்டனர்.

உருவச் சிலையை அமைத்தவர்கள் தொடர்பில் தமக்கு தகவல் தெரியாது என்றும் தாம் பால் அபிசேகம் செய்ததாகவும் உருத்திர சேனா அமைப்பினர் பொலிஸ் விசாரணையில் தெரிவித்துள்ளனர்.

எந்தவொரு அனுமதியுமின்றி அமைக்கப்பட்ட நாகபூசனி அம்மனின் சிலையை அகற்ற தீவிர நடவடிக்கையில் யாழ்ப்பாணம் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.

Share this Article