எரிபொருள் விற்பனை 7 நாள்களில் உயர்வு!- எரிசக்தி அமைச்சர் தகவல்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

கடந்த 7 நாள்களில் எரிபொருள் விற்பனை குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் காட்டுகிறது என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

தனது ருவிற்றர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவொன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

எரிபொருள் அனுமதிப்பத்திர கியூ.ஆர் அமைப்பு மற்றும் சாதாரண எரிபொருள் விற்பனையில் இந்த முன்னேற்றம் காணப்பட்டுள்ளது.

கடந்த வாரம் 60 வீதத்துக்கும் குறைவாக இருந்த விற்பனை தற்போது 80 வீதத்துக்கும் மேல் அதிகரித்துள்ளது.

இதேவேளை பண்டிகைக் காலங்களில் அதிகரித்து வரும் தேவைக்கு ஏற்ப எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளது என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Share this Article