சுழிபுரம் மேற்கு கலைமகள் முன்பள்ளியின் கால்கோள் விழா!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read
சங்கானை கல்விக் கோட்டத்துக்குட்பட்ட சுழிபுரம் மேற்கு கலைமகள் முன்பள்ளியில் கால்கோள் விழாவும் 32 வருட சேவையாற்றிய ஆசிரியருக்கான கௌரவிப்பு நிகழ்வும் நேற்று(ஏப்ரல் 4) மாலை 3 மணியளவில் நடைபெற்றது.

சுழிபுரம் மேற்கு  கலைமகள் முன்பள்ளி முகாமைத்துவ குழுத்தலைவர் வ.கோகுலநேசன் தலைமையில் இந்த நிகழ்வு கலைமகள் முன்பள்ளியில் இடம்பெற்றது.

ஆரம்ப நிகழ்வாக முதலாம் தரத்திற்கு  சென்ற கலைமகள் முன்பள்ளியின் மாணவர்களுக்கு பிரிவுபசார நிகழ்வும் தொடர்ச்சியாக புதிதாக முன்பள்ளிக்கு வருகைதந்த மாணவர்களுக்கான கால்கோள் விழாவும் இடம்பெற்றது.
தொடர்ச்சியாக முன்பள்ளியில 32 வருட காலமாக பணியாற்றி 60 வது அகவையை பூர்த்தி செய்த கலைமகள் முன்பள்ளியின் சிரேஷ்ட ஆசிரியர் நின்மதி பன்னீர் செல்வத்திற்கான கௌரவிப்பு நிகழ்வுகள் சமூக மட்ட அமைப்புக்களால் முன்னெடுக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து முன்பள்ளியின் மாதாந்த செயற்பாட்டின் ஒரு அங்கமாக ஆத்திசூடி மனன போட்டி முன்னெடுக்கப்பட்டு வெற்றியீட்டிய மாணவர்களுக்கான பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டது.
கலைமகள் முன்பள்ளி முகாமைத்துவ குழு தலைவர் வ.கோகுலநேசன், கலைமகள் முன்பள்ளி ஆசிரியர்கள், கலைமகள் முன்பள்ளி மாணவர்கள், பெற்றோர்கள்,  ஆசிரியர்கள், சமூக மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் எனப் பலரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.
Share this Article