அன்பழகன் ஆசிரியருக்கு புலமைச்சிகரம் பட்டம் வழங்கி கௌரவிப்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

அன்பொளி கல்வி நிலைய ஸ்தாபகரும், புலமைப் பரிசில் வகுப்பு ஆசிரியருமான அமரர் வே. அன்பழகன் அவர்களுக்கு அவரது அதி தனித்துவ கற்பித்தல் திறமையைப் பாராட்டி “புலமைச்சிகரம் “ எனும் கௌரவப் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.

ஐவின்ஸ் தமிழ் இணையத்தளம் இந்தக் கௌரவ பட்டத்தை அண்மையில் வழங்கியது. இந்தக் கௌரவ பட்டமளிப்பானது யாழ் நகரிலுள்ள அன்னாரின் இல்லத்தில் இடம்பெற்றது.

ஐவின்ஸ் குழுமத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த நிகழவில், யாழ். மத்தியகல்லூரி அதிபர் கலாநிதி எஸ். கே. எழில் வேந்தன், ஓய்வுபெற்ற முன்னாள் கல்விப்பணிப்பாளரும் பிரபல எழுத்தாளருமான எஸ். மகேசு ஆகியோர் பங்குபற்றி சிறப்புரையாற்றி, கௌரவ பட்டத்தை அன்பழகனின் குடும்பத்தினருக்கு கையளித்தமை குறிப்பிடத்தக்கது.

Share this Article