அச்சுவேலி வைத்தியசாலையில் குருதிச் சோகையை நிவா்த்தி செய்தல் கண்காட்சி!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read
அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் “குருதிச் சோகையை நிவா்த்தி செய்தல்” என்ற தொனிப் பொருளில் கண்காட்சி ஒன்று இன்று (ஏப்ரல் 1) இடம்பெற்றது.
குறைந்த செலவில் எமது பிரதேசத்தில் கிடைக்கக்கூடிய இலை வகைகள் மற்றும் காய்கறிகளுடன் போசாக்கினை அதிகரிப்பது தொடர்பான குறித்த கண்காட்சியை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை மற்றும் அச்சுவேலி பிரதேச வைத்தியசாலை ஆகியன இணைந்து நடாத்தின.
இக் கண்காட்சியில் அச்சுவேலிப் பிரதேச வைத்தியசாலையை அண்டிய பிரதேசத்தில் வசிக்கும் கர்ப்பிணி தாய்மார்களுக்கு போஷாக்கை மேம்படுத்துவதற்காக போஷாக்கு உணவு கண்காட்சியும் முன்னெடுக்கப்பட்டது.

இதில் இலகுவாக இயற்கையாக கிடைக்கக்கூடிய இலை வகை மற்றும் காய்கறி வகை கொண்டு பாரம்பரியமான உணவு தயாரித்து வழங்கப்பட்டது. அத்துடன் வீடுகளில் இவ்வாறு போசாக்கை மேம்படுத்துவதற்கு உணவினைத் தயாரிப்பது தொடர்பிலும் விளக்கமளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் கோப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் உடுவில் சுகாதார வைத்திய அதிகாாி, நல்லூர் சுகாதார வைத்திய அதிகாாி, அச்சுவேலி வைத்திய அதிகாரி மற்றும் வைத்தியர்கள் தாதிய உத்தியோகத்தர்கள் குடும்ப நல உத்தியோகத்தர்கள், சுகாதார பரிசோகர்கள், கர்ப்பிணி தாய்மார்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
Share this Article