தொன்மையான வழிபாட்டு இடங்களின் சட்ட ஆவணங்களை கோரும் தெல்லிப்பளை பிரதேச செயலகம்

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

மிகவும் பழமையும் வரலாற்றுச் சிறப்பும் மிக்க வழிபாட்டு இடங்களை அடையாளப் படுத்தி பாதுகாக்கும் நோக்கில்,கீரிமலை புனிதப் பிரதேசத்தில் அல்லது அதற்கு அண்மையில் அமைந்துள்ள கீழ் குறிப்பிடப்படும் வழிபாட்டு இடங்கள் பற்றிய வரலாற்று விபரங்கள் மற்றும் அதனுடைய சட்ட உரித்து ஆவணங்கள் வைத்திருப்பவர்கள் பற்றிய விபரங்கள் தெல்லிப்பளை பிரதேச செயலகத்தால் கோரப்பட்டுள்ளது.

01 )ஆதி சிவன்
02) கிருஸ்ணர் கோவில்
03) சடையம்மா சமாதி
04) கதிரையாண்டவர் கோவில்
05) உச்சிப் பிள்ளையார் கோவில்

மேற்குறிப்பிட்ட வரலாற்று சிறப்பு மிக்க இடங்களை பாதுகாக்கும் நோக்கில் மேற்கொள்ள வேண்டிய சில நிர்வாக ரீதியான நடவடிக்கைகளுக்கு விபரங்கள் மற்றும் சட்ட உரித்து ஆவணங்கள் மிகவும் பயனுள்ளதாக அமையும் என்பதால் விபரங்கள் கோரப்பட்டுள்ளது.

இவை தொடர்பான தகவலை கீழ்உள்ள தொடர்பு ஊடகங்கள் மூலமோ நேரிலோ வழங்க முடியும் என்று தெல்லிப்பளை பிரதேச செயலகத்தினர் அறிவித்துள்ளனர்.

Telephone:-0212241726
Fax:-0212241726
E-Mail:-valinorthdso@gmail.com
WhatsApp:- +94212241726
Messenger:-dstellipalai

Share this Article