கோணாந்தோட்டத்தில் பொருண்மியம் நலிந்த குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவித் திட்டம்!!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

யாழ்.மானிப்பாய் வீதி கோணாந்தோட்டப் பகுதியில் வசிக்கும் 36 பொருளாதாரம் நலிந்த குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவியாக குடும்பம் ஒன்றிற்கு தலா இரண்டாயிரம் ரூபா வீதம் 72 ஆயிரம் ரூபா பெறுமதியான உலர் உணவுப் பொதிகள் கடந்த நேற்றுமுன்தினம் (மார்ச் 27) வழங்கி வைக்கப்பட்டது.

கோணாந்தோட்டம் உதயதாரகை சனசமூக நிலைய செயலாளரும்,யாழ்.நாவாந்துறை றோமன் கத்தோலிக்க வித்தியாலய ஆசிரியருமான திருமதி கம்ஷவதனி சிறீ கணேசராசா அவர்கள் பூமணி அம்மா அறக்கட்டளையிடம் விடுத்த கோரிக்கைக்கு அமைய இந்த உதவி வழங்கப்பட்டுள்ளது.

அறக்கட்டளையின் ஸ்தாபக தலைவர் திரு விசுவாசம் செல்வராசா(பிரான்ஸ்)அவர்களின் நிதி ஏற்பாட்டில் இந்த உதவித் திட்டம் 36 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

 

 

 

 

Share this Article