யாழ் மாவட்டத்தில் பொருண்மியம் நலிந்த குடும்பங்களுக்கு இலவச அரிசிப் பொதி!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

பொருண்மியம் நலிந்த குடும்பங்களுக்கு இலவச அரிசிப் பொதி வழங்கும் மாவட்ட மட்ட நிகழ்வு இன்று (மார்ச் 26) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.

காலை 10.30 மணிக்கு நல்லூர் பிரதேச செயலகத்தில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.

அரசாங்கத்தின் 2022/2023 பெரும்போக நெல் கொள்வனவு நெல் கையிருப்பு அகற்றல் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் இந்த அரிசிப் பொதிகள் வழங்கப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மொத்தமாக ஒரு லட்சத்து 23 ஆயிரத்து 282 நபர்களுக்கு 12 லட்சத்து 32 ஆயிரத்து 820 கிலோ அரிசி வழங்கப்படவுள்ள நிலையில், நல்லூர் பிரதேச செயலாளர் பிரிவில் 10 ஆயிரத்து  375 நபர்களுக்கு ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 750 கிலோ அரிசி வழங்கப்பட்டு வருகின்றது.

இன்றைய நிகழ்வில் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன், யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன்(காணி), நல்லூர் பிரதேச செயலாளர் எழிலரசி அன்ரன் யோகநாயகம் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

Share this Article