யாழில் தந்தை செல்வா அவர்களின் 125 ஆவது ஜெயந்தி தின நிகழ்வு!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

தந்தை செல்வா அவர்களின் 125 ஆவது ஜெயந்தி தின நிகழ்வு எதிர்வரும் 31 ஆம் திகதி மாலை 3.30 மணிக்கு யாழ்ப்பாணத்திலுள்ள தந்தை செல்வா கலையரங்கில் நடைபெறவுள்ளது.

தந்தை செல்வா அவர்களின் நினைவுத் தூபிக்கு மலர் அஞ்சலி செலுத்தி அதனைத் தொடர்ந்து தந்தை செல்வா கலையரங்கில் நிகழ்வுகள் ஆரம்பமாகவுள்ளது.

இந் நிகழ்வானது மலையகம் 200 தொடர்பான தொனிப்பொருளாக அமையவுள்ளது.

நிகழ்வுகள்

தமிழ்த் தாய் வாழ்த்து
மங்கள விளக்கேற்றல்
வரவேற்புரை
சிறப்புரைகள்
பேச்சுப் போட்டியில் முதலாம் இடம்பெற்ற மாணவியின் உரை
பேச்சுப் போட்டிக்கான சான்றிதழ் வழங்கல்
கட்டுரைப்போட்டிக்கான சான்றிதழ் வழங்கல்
திறந்த கட்டுரைப் போட்டிக்கான சான்றிதழ் வழங்கல்
காவியக் கதிரோன் அனஸ் அவர்களின் புத்தக வெளியீடு

பேராசிரியர்.சி.பத்மநாதன் அவர்களின் புத்தக வெளியீடு
என்பன இடம்பெறவுள்ளன.

Share this Article