நகைத் திருட்டு சந்தேகநபர் போதனா மருத்துவமனையிலிருந்து தப்பி ஓட்டம்

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இருந்து யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு, மருத்துவப் பரிசோதனைக்காக அழைத்து வரப்பட்ட சந்தேகநபர் ஒருவர் தப்பியோடியுள்ளார். இந்தச் சம்பவம் நேற்று (மார்ச் 22) நடந்துள்ளது.

திருட்டுச் சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம், முலவையைச் சேர்ந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டிருந்தார். அவரிடம் நகைகளும் மீட்கப்பட்டிருந்த நிலையில், நேற்றுமுன்தினம் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

சந்தேகநபர் ஹெரோய்ன் போதைப் பொருள் தொடர்பான மருத்துவப் பரிசோதனைக்காக அழைத்து வரப்பட்டபோதே தப்பியோடியுள்ளார். சிறுநீர்ப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில், திடீரென சிறைக் காவலர்களை தள்ளிவிட்டு சந்தேகநபர் தப்பியோடியுள்ளார். சந்தேகநபரைக் கைது செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன என்று தெரிவிக்கப்படுகின்றது.

அதேவேளை, மருத்துவப் பரிசோதனையில் சந்தேகநபர் ஹெரோய்ன் பாவித்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Share this Article