எல்லே நீர்வீழ்ச்சியில் காணாமல்போன இளைஞர்கள் சடலங்களாக மீட்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

வெல்லவாய – எல்லாவல நீர் வீழ்ச்சியில் நீராடச் சென்ற நிலையில் காணாமல்போன நான்கு இளைஞர்களும் உயிரிழந்த நிலையில் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

நேற்றிரவு (மார்ச் 21) ஒருவருடைய சடலமும், இன்று (மார்ச் 22) காலை ஏனைய மூவரின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளன.

மீட்கப்பட்ட சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக வெல்லவாய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கல்முனை, சம்மாந்துறை மற்றும் சாய்ந்தமருது ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 20 வயதுக்கும் 23 வயதுக்கும் இடைப்பட்ட இளைஞர்களே நீராடச் சென்றபோது காணாமல் போயிருந்தனர்.

தனியார் பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் சுமார் 10 இளைஞர்கள் அடங்கிய குழுவொன்றே சுற்றுலா சென்றபோது இந்தச் சம்பவம் நடந்துள்ளது.

Share this Article