கப்ரக வாகனத்துடன் நேருக்கு நேர் மோதிய டிப்பர்!!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read
சாவகச்சேரி பிரதான  வீதியில் அரசடிச் சந்தியில் கப்ரக வாகனமும் டிப்பர் வாகனமும் நேருக்கு நேர் மோதி இன்று மதியம்(மார்ச் 21) விபத்துக்குள்ளாகியுள்ளது.
யாழ்ப்பாணத்தில் இருந்து கொடிகாமம் நோக்கிச் சென்று கொண்டிருந்த டிப்பர் வாகனம்  முன்னால் சென்ற மோட்டார் சைக்கிளோடு மோதுவதைத் தவிர்ப்பதற்காக எதிர் திசையில் திடீரென திருப்பிய பொழுது முன்னால் வந்த கப்ரக வாகனத்தோடு பலமாக நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் கப்ரக வாகனம் முற்றாகச் செய்தமடைந்தது.
விபத்தை அடுத்து டிப்பர் சாரதி டிப்பர் வாகனத்தை கைவிட்டு தப்பி சென்றுள்ளார். விபத்தில் கப்ரக சாரதிக்கு  தெய்வாதீனமாக எந்த காயங்களும் ஏற்படவில்லை.
விபத்து தொடர்பாக சாவகச்சேரி பொலிஸார் மேலதிக  விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Share this Article