சாக்லேட் தொடர்பில் இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

இலங்கைக்கு சட்டவிரோதமாக கொண்டு வரப்படும் வெளிநாட்டு சாக்லேட்டுக்களை விற்பனை செய்யும் வர்த்தக நிலையங்களை கண்டறிவதற்கான சோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்று இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இவ்வாறு சட்டவிரோத முறையில் கொண்டு வரப்படும் சாக்லேட்டுக்கள் தொடர்பில் பொது மக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என அந்தச் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.

அவ்வாறான சாக்லேட்டுக்களை விற்பனை செய்யும் வர்த்தக நிலையங்கள் மற்றும் அதன் உரிமையாளர்களுக்கு எதிராக உணவுச் சட்டத்தின் கீழ் நடவடிக்கைகள் மேற்கொள்ள முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Share this Article