வாள்வெட்டில் காயமடைந்த உறுப்பினரை பார்வையிட்ட சித்தார்த்தன் கஜதீபன்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

வாள்வெட்டுத் தாக்குதலுக்கு இலக்காகி யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் வலி கிழக்கு பிரதேச சபை உறுப்பினரை, பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் மற்றும் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் உள்ளிட்டோர் நேரில் சென்று பார்வையிட்டனர்.

இதன்போது யாழ்போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தியுடன் காயமடைந்தவர்கள் தொடர்பாக கலந்துரையாடினார்.

நேற்று இரவு (மார்ச் 17) ஆலய திருவிழாவிற்கு சென்று வீடு திரும்பிய பிரதேச சபை உறுப்பினர் மற்றும் அவரது மனைவி ஆகியோரை கொள்ளையர்கள் வழிமறித்து நகைகளை திருடமுற்பட்ட போது நடந்த இழுபறியில் கொள்ளையர்களின் வாள்வெட்டுக்கு இலக்காகி காயமடைந்த கணவனும் மனைவியும் யாழ்போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Share this Article