நாகர்கோயிலில் வீட்டின் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

பருத்தித்துறை, நாகர்கோயில் மேற்குப் பகுதியில் வீடொன்றில் மீது நேற்றிரவு பெற்றோல் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

அதில் ஒரு மோட்டார் சைக்கிள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ள நிலையில், இன்னொரு மோட்டார் சைக்கிள் பகுதியளவில் எரிந்து சேதமாகியுள்ளது. வீட்டின் ஜன்னல் கண்ணாடிகளும் சேதமாக்கப்பட்டுள்ளன.

இந்தச் சம்பவம் குறித்து பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Share this Article