எரிபொருள் வழங்காததால் நிரப்பு நிலைய ஊழியர்களுக்கு மிரட்டல்!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

திருத்த வேலைகள் காரணமாக எரிபொருள் விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது என்று கூறிய எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர்களை மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் அச்சுறுத்தியுள்ளனர். இது தொடர்பில் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் கைதடி பொன்னம்பலம் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நேற்றிரவு (மார்ச் 12) 9 மணியளவில் நடந்துள்ளது.

நாவற்குழி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நடந்தது போன்றதொரு சம்பவம் இங்கும் நடக்கும் என்று மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் மிரட்டிச் சென்றனர் என்று எரிபொருள் நிலைய முகாமையாளர் தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பாக சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகிறார்கள்.

Share this Article