உள்ளூராட்சித் தேர்தலுக்கான புதிய திகதி அறிவிப்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

எதிர்வரும் ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்த திகதி குறிக்கப்பட்டுள்ளது என்று தேர்தல்கள் ஆ​ணைக்குழு அறிவித்துள்ளது.

இது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவால் விசேட அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.

வாக்குச்சீட்டு அச்சிடல் உள்ளிட்ட சில சிக்கல்கள் காரணமாக திட்டமிட்டபடி மார்ச் 9 ஆம் திகதி உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்த முடியாமல் போனது என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தேர்தலை நடத்துவதற்கு சாதகமான தினமாக ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி காணப்படுகின்றது என்றும் தேர்தல்கள் ஆணைக்குழு வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய தேர்தல் திகதி தொடர்பாக மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர்களுக்கும் தௌிவுபடுத்தப்பட்டுள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிப்புரைக்கு அமைய, தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்கவின் கையொப்பத்துடன் இந்த அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.

Share this Article