சடுதியாக விலை குறைக்கப்படவுள்ள பாண்! – வெளியானது தகவல்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்திகளின் விலைகளை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

தற்போதைய சூழ்நிலையில் பேக்கரி தொழிற்துறை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அதை மீள கட்டியெழுப்புவதற்கு பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்திகளின் விலைகளை குறைப்பதே ஒரே தீர்வாகும். இதற்கு அரசாங்கத்தின் ஒத்துழைப்பை நாங்கள் எதிர்பார்த்துள்ளோம்.

தற்போது 150 முதல்180 ரூபா வரையில் விற்பனையாகின்ற பாண் றாத்தல் ஒன்றின் விலையை 100 ரூபாவாக குறைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share this Article