கிணற்றில் இருந்து முதியவரின் சடலம் மீட்பு!!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read
closeup of the feet of a dead body covered with a sheet, with a blank tag tied on the big toe of his left foot, in monochrome, with a vignette added

கரவெட்டியைச் சேர்ந்த 65 வயது முதியவர் ஒருவர் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கரவெட்டி, கப்பூதுவைச் சேர்ந்த வேலுப்பிள்ளை பொன்னையாப்பிள்ளை என்ற முதியவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

நேற்றுக்காலை (பெப்ரவரி 26) வீட்டில் இருந்து சென்ற அவர் வீட்டுக்குத் திரும்பவில்லை. அந்தப் பகுதியில் உள்ள பாதுகாப்பற்ற கிணறு ஒன்றில் இருந்து அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சடலம் மந்திகை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், பொலிஸார் இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Share this Article