யாழ்ப்பாணத்தில் 4 வயதுச் சிறுமி உயிரிழப்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

மூளைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் மேலதிக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த 4 வயது சிறுமி சிகிச்சை பலனின்றி உயிாிழந்துள்ளாா்.

யாழ்ப்பாணம் புத்துாா் கிழக்கு – ஊறணி பகுதியை சோ்ந்த அஜிந்தன் லக்ஸ்மிதா என்ற 4 வயதுச் சிறுமி கடந்த சிவராத்திாி தினத்தன்று திடீரென வாந்தி எடுத்து சுகயீனமடைந்த நிலையில் அச்சுவேலி வைத்தியசாலை சேர்க்கப்பட்டு, பின்னர் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

அவருக்கு அதிதீவிர சிகிச்சை பிாிவில் சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று சிறுமி சிகிச்சை பலனின்றி உயிாிழந்துள்ளாா்.

இறப்பு விசாரணைகளின் பின்னா் சிறுமியின் சடலம் பெற்றோாிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது

Share this Article