தேர்தல் நடத்த பணம் இல்லை!-காசுக்கட்டளை அனுப்பும் மக்கள்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

உள்ளூராட்சித் தேர்தலை நடத்த நிதி இல்லை என்று தேர்தகள் ஆணைக்குழு தெரிவித்திருக்கும் நிலையில் நாட்டில் பல இடங்களில் இருந்தும் தபாலகம் மூலம் தேர்தல் ஆணைக்குழுவுக்கு பணம் அனுப்பும் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

சில நாள்களுக்கு முன்னர் பாதுக்க பிரதேசத்தில் இருந்து மக்கள் காசுக்கட்டளை மூலம் தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவருக்குப் பணம் அனுப்பியிருந்த நிலையில், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரும் காசுக்கட்டளை மூலம் 500 ரூபா அனுப்பியுள்ளார்.

யாழ்ப்பாணம் சுண்டுக்குளியைச் சேர்ந்த இளைஞன் ஒருவர், “தேர்தலை நடத்தி ஜனநாயகத்தை நிலைநாட்டுவோம், சிறு துளி பெருவெள்ளம்” என தபாலகம் ஊடாக 500 ரூபாய் காசுக்கட்டளையை தேர்தல் ஆணைக்குழுவுக்கு அனுப்பியுள்ளார்.

Share this Article