கோம்பையன்மணலில் மருத்துவக் கழிவு எரியூட்டி அமைப்பது தொடர்பில் கலந்துரையாடல்!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

யாழ்ப்பாணம் கோம்பையன்மணல் இந்து மயானத்தில் மருத்துவக் கழிவுகளை எரியூட்டுவதற்கான எரியூட்டி அமைப்பது தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் மருத்துவக் கழிவுகள் அகற்றப்படாது சில நாள்களாக பாரவூர்திகளில் தேங்கியுள்ளன.

இது தொடர்பில் வடக்கு ஆளுநரின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது. இந்த விடயம் தொடர்பில் வடக்கு ஆளுநர் செயலாளர் தலைமையில் ஆளுநர் அலுவலகத்தில் கலந்துரையாடல் நடத்தப்பட்டது.

இந்தக் கலந்துரையாடலில் யாழ்ப்பாண மாநகர சபையின் பிரதம பொறியியலாளர், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

யாழ். போதனா மருத்துவனையின் மருத்துவ கழிவுகளை எரிப்பதற்கு யாழ். மாநகர சபைக்குட்பட்ட கோம்பையன் மணல் மயானப் பகுதியில் எரியூட்டி ஒன்றை அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றின் உதவியுடன் அமைத்து செயற்படுத்துவது தொடர்பில் ஆராயப்பட்டிருந்தது.

Share this Article