மருந்துகளுக்குக் கடும் தட்டுப்பாடு!- கைகொடுக்கும் சந்நிதியான் ஆச்சிரமம்!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலைக்கு 7 லட்சத்து 70 ஆயிரம் ரூபா பெறுமதியான மருந்துப் பொருள்கள் வழங்கப்பட்டுள்ளன.

வைத்தியசாலையில் மருந்துப் பொருள்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய மருந்துப் பொருள்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளன.

மருந்து வ ககள் வைத்தியசாலையின் பொறுப்பு வைத்திய அதிகாரி ரதினி காந்தநேசனிடம், சந்திநிதியான் ஆச்சிரமரத் தலைவர் மோகனதாஸ் சுவாமிகள் நேரடியாகச் சென்று வழங்கினார்.

சந்நிதியான் ஆச்சிரமத்தால் மல்லாவி ஆதார வைத்தியசாலை, தருமபுரம் பிரதேச வைத்தியசாலை, மூங்கிலாறு பிரதேச வைத்தியசாலை, முழங்காவில் ஆதார வைத்தியசாலை, ஊர்காவற்துறை ஆதார வைத்தியசாலை, கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலை, வல்வெட்டித்துறை பிரதேச வைத்தியசாலை என்பனவற்றுக்கு ஐந்து மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான மருந்து பொருள்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளன.

Share this Article